• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில், ஜெ. பிறந்த தினம்:

ByN.Ravi

Feb 24, 2024

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா அதிமுக ஓபிஎஸ் அணிசார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, சோழவந்தான் நகரச்செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தொகுதி இனைச் செயலாளர் குபேந்திரன் முன்னிலை வகித்து, இனிப்புகள் வழங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் விஜயன், நகர துணைச் செயலாளர் கல்லணை, மாவட்ட பிரதிநிதி முத்து, வார்டு செயலாளர் தனவீரபாண்டியன், வீராசாமி, நல்ல முருகன், டீ கடை ராஜேந்திரன், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.