• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 – ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அதிமுக நகர் கழகத்தின் சார்பில் அன்னதானம்

ByP.Thangapandi

Feb 24, 2024

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக நகரத்தில் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் அதிமுக முன்னாள் முதல்வரும், புரட்சி தலைவியுமான ஜெயலலிதா அவர்களின் 76 -வது பிறந்த நாள் விழா முன்னிட்டு, ஜெயலலிதா- வின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ ஐ. மகேந்திரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், வழக்கறிஞர் லட்சுமணன், நகர்மன்ற தலைவி சகுந்தலா, முன்னாள் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ கே.டி.ராஜா, சோலை ரவிக்குமார், குணசேகர பாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பல திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.