• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்சுழியில் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி.., நீதிபதி அபர்ணா தொடங்கி வைத்தார்…

ByN.Ravi

Feb 23, 2024

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணியை, நீதிபதி அபர்ணா தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பேரில், திருச்சுழி வட்ட சட் டப்பணிகள் குழு மற்றும் ஸ்பீச் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான இணைய பாதுகாப்பு மற்றும் இளம் வயது திருமணத்திற்கு எதி ரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் திருச்சுழி நீதிமன்ற நீதிபதி அபர்ணா பேரணியை, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது..,
போதிய கல்வி அறிவின்றி வறுமையின் காரணமாக இளம் வயதிலேயே பெண்களை திருமணம் செய்து கொடுப்பதால், பெண்களுக்கு உண்டாகும் இன்னல்கள், பற்றியும் பெண்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டி கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்ற அடைய வேண்டும் என்று நீதிபதி அபர்ணா பேசினார்.
விழிப்புணர்வு பேரணியில், ஸ்பீச் நிறுவன திட்ட இயக்குனர நியூட்டன் பொன்ன முதன், மக்கள் தொடர்பாளர் பிச்சை பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.