• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தலையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கரகம் ஆடிய சிறுமி, இணையத்தில் வைரலாகும் வீடியோ

ByKalamegam Viswanathan

Feb 18, 2024

நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் ஊர் ஊர்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக மதுரையில் இன்றும் நாளையும் நம்ம ஊர் திருவிழாவானது பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை போற்றும் வகையில் பாரம்பரிய இசைகளை இசைத்து ஆடி பாரம்பரியமான நமது கலைகளை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கிராமிய இசை பாடலுக்கு ஒன்றுக்கு ஒரு சிறுமி கீழே நின்றவாரு தலையில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை தலையில் வைத்து கரகம் ஆடியது. தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாட்டுப்புறக் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டதாக இந்த சிறுமி தெரிய வருகிறது. அந்த சிறுமி கரகம் ஆடும் பொழுது அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து தற்போது அந்த வீடியோ ஆனது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு அனைவராலும் பாராட்டை பெற்று வருகிறது.