• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மல்லாங்கிணறு மதுரை பெரியார் பஸ்நிலையத்திற்கு புதிய வழித்தடம், அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

ByKalamegam Viswanathan

Feb 13, 2024

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறிலிருந்து – மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு, புதிய வழித்தடம் துவக்க விழா நடை பெற்றது. விழாவில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, புதிய வழித்தடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், அமைச்சர் பேசும் போது.., மல்லாங்கிணறு பேரூராட்சியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருப்பதோடு, தற்போது வளர்ந்து வரும் பேரூராட்சி யாக இருந்து வருகிறது. மல்லாங்கிணறிலிருந்து மதுரைக்கு டவுன் பேருந்து வசதி வேண்டும் என்று மக்கள் நீண்ட கால மாக கோரிக்கை விடுத்து வந்தார்கள். மக்களின் கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது. புதிய பஸ் வழித்தடத்திற்கு ஏற்பாடு செய்த போக்கு வரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரி களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் , பொது மேலாளர்கள் ராகவன், . துரைச்சாமி வர்த்தக மேலாளர் நடராஜன் முருகானந்தம் கிளை மேலாளர் ராஜ் மோகன் பேருராட்சித் தலைவர் துளசி தாஸ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், நகர திமுக செயலாளர், ஒன்றிய செயலாளர் கண்ணன், முருகேசன், துணைச் செயலாளர் கோச்சடை, கவுன்சிலர்கள் கருப்பையா, வழக்கறிஞர் பாலச்சந்திரன்
பேரூராட்சி கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.