• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிராவில் கொசு சூறாவளி

Byவிஷா

Feb 13, 2024

நாம் இதுவரை காற்று, மணல், மழை போன்ற சூறாவளியைப் பார்த்திருப்போம். ஆனால், கொசு சூறாவளியைப் பார்த்திருக்கிறோமா? இனி அதையும் பார்க்கலாம். ஆம், மகாராஷ்டிர மாநிலம், முத்தா ஆற்றின் மீது அசாதாரண கொசு சூறாவளியைப் பார்த்து மக்கள் வியப்படந்திருப்பதுடன், பதற்றமும் அடைய வைத்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கேசவ்நகர் மற்றும் காரடி என்ற பகுதியில் வசிக்கும் மக்கள், முத்தா ஆற்றின் மீது பறந்த அசாதாரண “கொசு சூறாவளி” பார்த்து வியப்படைந்தனர்.
இது தொடர்பான வீடியோவை எடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். இது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. ஆனால் அடர்ந்த காட்டு பகுதிகளில் மட்டுமே நிலவும் இந்த மாதிரியான செயல்கள் கட்டிடங்கள் அதிகமாக இருக்கும் நகர் பகுதியில் நிலவியது தான் புதியதாக பார்க்கப்படுகிறது. காற்று, மணல், மழை போன்ற சூறாவளியை பார்த்த நமக்கு இந்த சூறாவளி சற்று பதற்றத்தை தருகிறது என்றே கூறலாம்.