• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 11, 2024

1. இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பழமையான நாகரீகத்தின் பெயர் என்ன?
 சிந்து சமவெளி நாகரிகம்

2. தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்? (இந்த நபர் கரும்புகள் இனிப்பு சுவையை அதிகமாக்கினார்)
 ஜானகி அம்மாள்

3. உலகின் மிக நீளமான மணற்கல் குகை எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளது?
 கிரேம் பூரி, மேகாலயா (Krem Puri )

4. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?
 கொச்சி சர்வதேச விமான நிலையம்

5. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
 23 டிசம்பர்

6. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
 24 ஜனவரி

7. சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?
 5 செப்டம்பர்

8. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் எப்போது நடைபெற்றது?
 1930

9. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 12 கால்விரல்கள் கொண்ட பிரபலமான தடகள வீரர் யார்?
ஸ்வப்னா பர்மன்

10. பிரபல கவிஞர் கபீர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்?
 15 ஆம் நூற்றாண்டு கி.பி