• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எங்கள் நிறுவனத்தின் மீது புகார் வந்த பிறகு மேலும் நாங்கள் உயர்ந்துள்ளோம்- MyV3 Ads உரிமையாளர் பேட்டி…

BySeenu

Feb 5, 2024

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் My V3 ads நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம். ஆசை காட்டி மோசடி செய்தது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை செய்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் க்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று அவர் கோவை மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியில் வந்த MyV3Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், என் நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றதாகவும், அதற்காக ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்ததாகவும் கூறினார். இன்று காலை இதே நிறுவனம் வேறு பெயரில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், அவர்கள் புகார் அளித்த அந்த நிறுவனத்தில் தானும் பணிபுரிந்ததை ஒப்புக்கொள்கிறேன் எனவும், ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது அவர்கள் வந்து புகார் அளிப்பதற்கான நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார். தற்பொழுது இந்த நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு, இது குறித்து பேசினால் தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம் எனவும் தெரிவித்தார். விளம்பரத் துறையும் வியாபார துறையும் எத்தனை நாட்கள் இருக்குமோ அவ்வளவு நாட்கள் எனது நிறுவனமும் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

அன்றைய தினம் கோவை நீலாம்பூர் பகுதியில் திரண்ட மக்களை நான் அழைக்கவில்லை எனவும், அவர்களாகவே தன் எழுச்சியாக வந்ததாகவும் கூறிய அவர், அவர்களைத் தான் ஒழுங்கு மட்டுமே படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் அரசியல் பின்புறம் இல்லாமலேயே இத்தனை பேர் தன் எழுச்சியாக வந்தபோதே நான் ஜெயித்து விட்டதாகவும், தங்கள் பின்னால் எந்த ஒரு அரசியல் பின்புலம் இல்லை எனவும் கூறினார். மேலும் தங்கள் நிறுவனத்தின் பொருட்களை போலி என கூறுபவர்கள் அதனை நிரூபிக்கட்டும் எனவும், அவை போலி என்றால் அதற்கான தர சான்றிதழ்களை அளித்தவர்கள் யார்? எனவும் கேள்வி எழுப்பினார். தங்கள் நிறுவனத்தில் இருப்பதெல்லாம் இந்திய மருந்துகள் எனவும், பாரம்பரிய மருந்துகள் எனவும் கூறிய சக்தி ஆனந்த் இதனை விற்பதற்கு யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு எனவும் மக்கள் அவர்களாகவே விரும்பி வாங்கி உட்கொள்வதாகவும் தெரிவித்தார். அந்த பொருட்கள் தயாரித்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார். திரைப்படத்திற்கு எப்படி எதிர்மறை விமர்சனங்கள் இருந்தால் அந்த திரைப்படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுமோ அதுபோன்று எதிர்மறை விமர்சனங்களால் தங்கள் நிறுவனம் தற்பொழுது மேலும் உயர்ந்துள்ளதாகவ கூறினார்.

மேலும் யாரேனும் அனுமதி பெற்று தந்தால் அன்றைய தினம் கூடிய கூட்டத்தைப் போல் ஒரு வாரத்தில் சுமார் 20 லட்சம் பேரை தன்னால் கூட்ட முடியும் எனவும் தங்கள் நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை எனவும் பொருட்களை மட்டுமே வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.