சிவகங்கையில் ராமர் சீதை படத்தை அவமதித்தவர்கள் மீது தமிழக அரசு காவல்துறையை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தமிழக அரசையும்
காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போதே பாஜகவினர் அரண்மனை வாசல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ராமர் சீதை படத்தை காளையார் கோவில் பகுதியில் அவமதித்து ஒட்டியவர்களை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ராமர் சீதை படத்தை அவமதித்த நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் பாஜகவினர்.
