• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மினி மராத்தான்

ByKalamegam Viswanathan

Feb 5, 2024

மதுரையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் உலகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மினி மராத்தான் மதுரை கே. கே. நகர் சுந்தரம் பார்க் நடையாளர் அரங்கில் நடைப்பெற்றது.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி தொடங்கி மினி மராத்தானை துவக்கி வைத்தார். இதில் ரோட்டரி உறுப்பினர்களும் பொது மக்களும் பங்கேற்றனர். மூன்று கிலோ மீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை நடைப்பெற்றது‌.இதில் மராத்தான் முடிவடைந்த நிலையில் ஜெட்லி புக்ஸ் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிறுவனத்தின் சார்பில் டாக்டர்.டிராகன் ஜெட்லி, பக்கிரி சாமி ஆகியோர் உலக சாதணைக்கான் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை இதற்கான ஏற்பாடு செய்த ரேவதி குமரப்பனுக்கு வழங்கப்பட்டது.

புற்றுநோய் விழிப்புணர்வு மாவட்ட சேர்மன் ரேவதி குமரப்பன், துணை சேர்மன் கிருபா தியானேஷ், மதுரை ஒருங்கிணைப்பாளர்கள் சிவசங்கர் ராஜ்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் அசோக், முருகானந்த பாண்டியன், மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.