• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு, எங்களது பாராட்டுக்கள் மருதநாட்டு மக்கள் கட்சி தலைவர் பனை ராஜ்குமார் பேட்டி…

Byகுமார்

Feb 4, 2024

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம் புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்க்கு எங்களது பாராட்டுக்கள் மருதநாட்டு மக்கள் கட்சி தலைவர் பனை ராஜ்குமார் பேட்டி..,

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள செய்தியாளர்கள் அரங்கத்தில் மருத நாட்டு மக்கள் கட்சி தலைமையக பொது குழு கூட்டம் இன்று நடைபெற்றது
இந்த பொதுக்குழு கூட்டத்திற்குமருதநாட்டு மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பனைராஜ்குமார் தலைமையிலும் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியது..,
தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதிய படுகொலைகளுக்கும் ஒரு ஆணியும் அமைத்து அதன் மூலம் நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும்
புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு ஆந்திர மாநிலம் தெலுங்கானா மாநிலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சிலையை போன்று 225 அடியில் சென்னையில் அமைக்க வேண்டும் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு சக்திகளோடு இணைந்து போட்டியிடத் திட்டம் உள்ளது என்றார்.

மேலும் பிறப்பால் மனிதர்களின் ஏற்றத்தாழ்வு இல்லை, அனைவரும் சமமானவர்கள் என புரிந்து கொண்டு 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சனாதான கோட்பாட்டை ஆதரித்து நடைமுறைப்படுத்த முயற்சி செய்பவர்களை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

இமானுவேல் சேகரன் அவர்களுக்கு 3 கோடி மதிப்பீட்டில் பரமக்குடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் நெற்கெட்டும் செவல் மாவீரன் வெண்ணிக் காலாடிக்கு மணிமண்டம் அமைப்பதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டிய தமிழக அரசுக்கு நன்றி என்றும், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக அரசு பெத்ரனம் காட்டாமல் உடனடியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை காலதாமதம் இன்றி உடனடியாக அறிக்கையை வெளியிட்டு உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்
அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். Gst வரியை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்துகிறது என்றும் இந்திய ஜனநாயக நாட்டில் அம்பேத்கர் அவர்கள் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி துவங்கலாம். இந்த நிலையில் நடிகர் விஜய் துவங்கியிருக்கக்கூடிய கட்சிக்கு எங்களது கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறது என்றார்.