• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

“டெவில்” திரை விமர்சனம்

Byஜெ.துரை

Feb 3, 2024

ராதாகிருஷ்ணன் தயாரித்து ஆதித்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்” டெவில்”

இத்திரைப்படத்தில் விதர்த், பூர்ணா, சுபஸ்ரீ, த்ரிகுன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது.

விதார்த் ஒரு வக்கீலாக இருக்கிறார் தனது அலுவலகத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ யுடன் திருமணத்திற்கு முன்பு இருந்தே தொடர்பில் உள்ளார்.

தனக்கு திருமணம் முடிந்தும் முதலிரவில் கூட விதார்த்க்கு தனது மனைவி பூர்ணா மீது உள்ள மோகத்தை விட சுபஸ்ரீ மீது அதீத மோகமுள்ளது இதனால் இருவருக்குள்ளும் ஒரு மன கசப்பு ஏற்படுகிறது

நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விட்டு விலகி செல்கிறார் விதார்த்.

என்ன காரணம் என்று தெரியாமல் மணம் உடைந்த பூர்ணா ஒரு நாள் விதார்த் அலுவலகத்திற்கு செல்கிறார் அங்கு சுபஸ்ரீ உடன் முத்த காட்சிகளை பார்த்த பூர்ணா அதிர்ச்சி அடைந்தார்

உடனே கோபமாக தனது காரில் வீட்டிற்கு செல்லும் வழியில் தனக்குன்னு யாரும் இல்லாத தனிகாட்டு ராஜாவாக பைக்கில் வலம் வந்த த்திரிகுன்னைவை எதிர்பாரத விதமாக தனது காரல் இடித்து விபத்து ஏற்படுகிறது

விபத்து ஏற்படுத்திய பூர்ணா மருத்துவமனை மற்றும் அவரது வீடு வரை நேரில் சந்திக்க நேர்கிறது.

இந்நிலையில் தான் இருக்கும் மனக்கவலையில் திரிகுன்னை சந்திக்கும் போது இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது.

இதனால் பூர்ணா விதார்த் இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? தனது காதலன் திரிகுன்னைவை கரம் பிடித்தரா? விதார்த் சுபஸ்ரீ இவர்களுக்குள் உள்ள தொடர்பு நீடித்ததா? என்பது தான் டெவில் படத்தின் மீதி கதை.

பூர்ணா த்திரிகுன் சந்திக்கும் காதல் காட்சிகள் மூலம் படத்தை விறுவிறுப்பாக
நகர்த்தியுள்ளார் இயக்குநர் ஆதித்யா

விதார்த் பூர்ணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் போக போக விதார்த் இடையிலான பிரச்சனைகளை பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில் படம் முடிகிறது.

படத்தின் நாயகன் விதார்த் நன்றாக நடித்திருக்கிறார்.

சுபஸ்ரீ இடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகள்

மற்றும் தனது மனைவி பூர்ணாவிடம் மன்னிப்பு கேட்டு அழும் காட்சிகள் நடிப்பின் சிகரத்தை தொட்டுள்ளார் விதார்த்

சுபஸ்ரீ கவர்ச்சியிலும் தனது நடிப்பில் குறை ஒன்றும் சொல்ல முடியாது

த்திரிகுன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகி பூர்ணா குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மிஷ்கின் இசையில் பாடல்கள் அருமை பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

கார்த்திக் முத்துக்குமார் தனது கேமரா கண்களால் அழகாக படம் பிடித்த விதம் சிறப்பு

மொத்தத்தில் “டெவில்” பேய் படம் இல்லை