• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் UNDER NATS, NAPS SCHEME TRAINING வேலைவாய்ப்பு முகாம்

Byகுமார்

Jan 30, 2024

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் மதுரை கிடாரிப்பட்டியில் உள்ள லதா மாதவன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் .மாதவன் மற்றும் சென்னையை சேர்ந்த பவுனா கல்வி திறன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அய்யா கண்ணு ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர் சந்திப்பில்,

லதா மாதவன் கல்வி நிறுவனமும் பவுனா கல்வி திறன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையிம் இணைந்து மத்திய அரசின் UNDER NATS, NAPS SCHEME TRAINING என்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ளது,

மத்திய அரசின் UNDER NATS, NAPS SCHEME TRAINING வேலைவாய்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி 2ம் தேதி மதுரை கிடாரிப்பட்டியில் உள்ள லதா மாதவன் கல்லூரியில் நடைப்பெறுகிறது, இதில் 10, 12, ITI, டிப்ளமோ, பட்டதாரி (Arts & science) படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம், இதற்கு வயது 18 முதல் 35 வரை இருக்க வேண்டும், NATS/NAPS SCHEME யில் பயிற்சி பெறாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சியும், பயிற்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி மற்றும் இஎஸ்ஐ & பிஎஃப் வும் வழங்கப்படும், மாத உதவி தொகையாக 14,500 முதல் 1500 வரை கல்வி தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும் மேலும் 15,500 ரூபாய் வரை கல்வி தகுதிப்பேற்ப வழங்கப்படும், மாதம் 1050 வருகைப்பதிவு தொகையாகவும் வழங்கப்படும், இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு நிறுவனத்தின் தேவை & பயிற்சியாளர்களின் திறமைக்கேற்ப பணி நிமித்தம் செய்து தரப்படும், பயிற்சி நடைப்பெறும் இடம் சென்னை (பாடி), செங்கல்பட்டு (மகேந்திரா வேர்ல்ட் சிட்டி), மதுரை (காரியாபட்டி) ஆகிய இடங்களில் நடைபெறும், பயிற்சியாளர்களுக்கு உணவு, தங்கும் விடுதி, பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் வழங்கப்படும், தென் மாவட்ட வேலை இல்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும், இவ்வாறு கூறினார்கள், இந்நிகழ்வில் லதா மாதவன் கல்வி நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.