• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் நிலையூரில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தின விழாவில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

ByKalamegam Viswanathan

Jan 26, 2024

மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் நாள். அதிமுக சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை ஹார்விப்பட்டி பகுதியில் 100க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய MLA ராஜன் செல்லப்பா பேசுகையில்:

தமிழகத்தில் திமுக எந்த திட்டத்தை செயல்படுத்தாமல் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. மந்திரியாக உள்ளவர் இன்றுவரை சிறையில் உள்ளார், இதைவிட அசிங்கம் எதுவும் இல்லை. சிறையில் உள்ளவரை மந்திரியாக வைத்திருக்கின்ற அளவிற்கு மோசமான மனநிலையில் தமிழக முதல்வர் உள்ளார்.

அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்கிறார் பொன்முடி, அடுத்து KKSSR, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மீது வழக்குகள் வர இருக்கிறது. ஆபத்தை நோக்கி திமுக அரசு உள்ளது. இவர்கள் எப்படி அடுத்து பதவிக்கு வர முடியும் என கேள்வி எழுப்பினார்.

திமுகவை வீழ்த்தாவிட்டால் அதிமுக வர வேண்டிய எண்ணம் நமக்கு இல்லை. ஆனால் மக்கள் மனநிலை சோகம் கொள்ளும். யாரை கேட்டாலும் திமுகவினர் அடாவடி, பிரியாணி கடையில் சண்டை. மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு போட்டியாக சேலத்தில் திமுகவினர் மாநாடு நடந்துச்சு. மதுரையில் அதிமுக மாநாட்டில் மக்கள் அலைக்கூட்டம்., சேலம் இளைஞர் அணி கூட்டத்தில் சூதாட்டம், கோட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

மறைந்த கலைஞரைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என அதிமுக நினைத்தாலும், மதுரைக்கு கொண்டுவந்த 2 திட்டத்தை பற்றி முதல்வர் கூறினார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்றைக்கு காட்சி பொருளாக உள்ளது, அதேபோல் நேற்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் வைத்து ஜல்லிக்கட்டு நடத்தினார்கள் இன்று காத்தாடிக் கொண்டிருக்கிறது. 60 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து சூதாட்டக் களமாக மாற்றுகிறார்கள் அந்த மைதானத்தை காட்சி பொருளாக பொருட்காட்சி மையமாக வாடகைக்கு விடப் போகிறார்கள்.

திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ மகன் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை சித்திரவதை செய்த வழக்கில் அதிமுக சார்பில் வருகின்ற 1ம் தேதி போராட்டம் அறிவித்த பின்னரே காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கலாச்சாரம் அற்ற, பண்பாடற்ற ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய MLA கூறுகையில்:

இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். பல்வேறு இடங்களில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர். பத்திரிக்கையாளர் அக்கரையில் காவல்துறையினர் மெத்தனமாக உள்ளது. காவல்துறையை நிர்ணயிக்கின்ற முதல்வர் ஒரு பொம்மையாக இருக்கிறார்., சரியாக நிர்வகிப்பதில்லை. காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் இது போன்ற மாற்றங்களை செய்வதை மட்டுமே தனது குறிக்கோளாக வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி ஒரு மாவட்டத்திற்கு சொந்தமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சொந்தக்காரர். ஜாதி மதம், பேதம் இன்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைவராக எடப்பாடி உள்ளார். எனவே அவர் முதல்வராக வருவதற்கு அனைத்து தகுதியும் முழுமையாக உள்ளது. எடப்பாடி முதல்வராக வருவதற்கு யாருக்கும் ஆட்சபனை இல்லை, அண்ணாமலைக்கு வேண்டுமானால் ஆட்சபனை இருக்கலாம்.?

எத்தனையோ திரைப்பட நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்து பின்வாங்கியுள்ளனர். இதுவரை வெற்றிபெற்றது எம்ஜிஆர் மட்டுமே அதனை தொடர்ந்து ஜெயலலிதா தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை. விஜய் பொது நலனில் நாட்டு நலப்பணி செய்தால் நாங்கள் வரவேற்கிறோம், விஜய் கட்சி ஆரம்பித்து என்ன கொள்கை, என்ன திட்டங்கள் செய்தார் என்பதை மக்கள் பார்க்கட்டும். கமலஹாசன் கூட கட்சி ஆரம்பித்தார் இன்றைக்கு எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்.

விஜய் அவர்களை தரம் தாழ்த்த விரும்பவில்லை ஒரு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிமுகவை ஆதரித்தனர், அதுஒரு ரசிகர் மன்றம் விஜய் ஒரு சிறந்த நடிகர். மக்கள் பணியை செய்யக்கூடிய அளவில் திறமையானவரா என்பதை அறிய முடியவில்லை அதற்கான வாய்ப்பு குறைவு.

ஒரு முதல்வர் தான் சொல்லுகிற செயலாற்றுகின்ற நலத்திட்டங்கள் மீது நம்பிக்கை இருந்தால் இன்றைக்கு அமைச்சர்களை அச்சுறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக ஆட்சியில் மக்களுக்காக கொடுக்கப்பட்ட திட்டங்களை சொல்லித்தான் வாக்குகள் கேட்டது. இதுபோன்று திட்டங்களை சொல்லி வாக்குகள் கேட்க வேண்டுமே தவிர அமைச்சர்களையோ, மாவட்ட செயலாளர்களையோ பயமுறுத்தி கேக்குகிற வாக்குகள் தவறான அணுகுமுறைக்கு முறைகேடான நடைமுறைக்கு தயாராக உள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் முறைகேடாக நடத்துவதற்கு தயாராக இருக்கிறார், ஜனநாயகத்தை நம்புகிறவராக ஸ்டாலின் இல்லை என்றார்.