• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூரணீஸ்வரி கோவில் சுத்தம் செய்யும் பணி

BySeenu

Jan 24, 2024

ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் முயற்சியை அனைவரும் கையில் எடுக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். அதன் படி நாடு முழுவதும் உள்ள கோவில்களை பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஜே.எஸ்.ஜே.எஸ்.டிரஸ்ட் வேத பாடசாலை வளாகத்தில் உள்ள அன்னபூரணீஸ்வரி கோவில் சுத்தம் பணியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர். டிரஸ்டின் நிறுவன தலைவர் ரவி ஷ்யாம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரும் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்கள், பிரகாரங்கள் , கதவுகள் என அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. இதில் பாடசாலை மேலாளர் வேணுகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.