• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

Byவிஷா

Jan 23, 2024

தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் ஜனவரி 26 வரை நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க கூடாது. இரவு கோவிலில் தங்க அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கோவிலுக்கு எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.