• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அயோத்தியில் நகைக்கடைக்காரரின் அசத்தல் தயாரிப்பு..!

Byவிஷா

Jan 22, 2024

அயோத்தியில் நகைக்கடைக்காரர் ஒருவர் ராமர் கோவில் மாதிரியிலேயே தங்க மோதிரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
அயோத்தியில் 2000 கோடி ரூபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் செய்து ராமர் கோயிலை திறந்து வைத்தார். நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் 18 கேரட் தங்கத்தை கொண்டு அயோத்தி ராமர் கோயில் மாதிரியை உருவாக்கி உள்ளார்.
ராமர் கோயிலின் அமைப்பு, தூண்கள், கூரை உள்ளிட்டவை எவ்வாறு உள்ளதோ அதே வகையில் அற்புதமாக இந்த கலைப்படைப்பை உருவாக்கி உள்ளார். சுமார் 1.25 லட்சம் ரூபாய் மதிப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது அனைவராலும் பாராட்டுதலுக்கு உள்ளாகியுள்ளது.