• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!

ByKalamegam Viswanathan

Jan 10, 2024

மதுரை அலங்காநல்லூரில் உள்ள இணையதள மையங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் வீரர்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஆர்வத்தோடு தங்கள் ஆவண படிவங்களை கொடுத்து முன்பதிவு செய்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் பொங்கல் திருநாளையொட்டி தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 16ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு, 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் வாடிவாசல், காளைகள் விளையாடும் ஆடுகளம், பார்வையாளர்கள் அமரும் கேலரிகள் அமைக்கும் பணிகளில் விழாக்கமிட்டினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொள்வதற்காக காளைகளுக்கு, வீரர்களுக்கும் இன்று 12 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள இணையதளம் மையங்களில் தங்களது ஆவணங்களை கொடுத்து முன்பதிவு செய்து வருகின்றனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்த காலை உரிமையாளர்களும், வீரர்களும் முறையாக முன்பதிவு செய்து அதற்கான ரசீதுகளை தரவிறக்கம் செய்து பெற்றுச் சென்றனர். முன்பதிவு ரசீதுகளைப் பெற்றுச்சென்ற காளைகளின் உரிமையாளர்களும், வீரர்களும் தாங்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வோம் என்ற உற்சாகத்துடன் சென்றனர்.