மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி முகாம் தொடக்க விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்துவக்கி வைத்தார்.
சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், கல்லூரியின் இயற்பியல் துறையும் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி முகாம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து சிறப்புரையாற்றி இப்பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார். இப்பயிற்சி முகாம் இன்று முதல் ஐந்து நாட்கள் வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் 50 பேர் பங்கேற்க உள்ளனர்
இவர்களுக்கு ஐந்து நாட்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விளக்கமுறை வகுப்புகளும் செய்முறைப் பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி முதல்வர் க.துரையரசன், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் புவனேஸ்வரன் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.