• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து பணம் கொள்ளை- கொள்ளையர்கள் பெட்டியை திறக்க முடியாததால் பணம் தப்பியது…

ByKalamegam Viswanathan

Jan 6, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற இடத்தில், இந்தியா ஒன் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில்,நேற்று மர்ம நபர்கள்,ஏடிஎம் மையத்தில் இருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏடிஎம் இயந்திரத்தின் டிஸ்ப்ளே உடைத்து உள்ளே பணத்தை எடுப்பதற்கு முயன்றுள்ளனர். பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறக்க முடியாதால், அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வைத்து சோதனை நடத்தி,கொள்ளையர்களை வலைபேசி தேடி வருகின்றனர்.