• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை நகரில் திமுக மகளிர் அணி சார்பில், கனிமொழி பிறந்தநாள் விழா..! முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி கொண்டாட்டம்..!

ByG.Suresh

Jan 5, 2024

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள அன்னை முதியோர் இல்லத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் ஏற்பாட்டில் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை தலைமையில்மகளிர் அணி துணை அமைப்பாளர் மார்க்கெட் கமலா முன்னிலையில்பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புறவழிச் சாலையில் அமைந்துள்ள அன்னை முதியோர இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு களக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்யப்பட்டது. திமுக மகளிர் அணி நிர்வாகிகள் அங்குள்ள முதியோருக்கு அறுசுவை உணவை பரிமாறினார்கள்.
நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி விஜயகுமார், அழகு பிள்ளை குணசேகரன், சுதாசிவப்பிரகாசம்,ராணி ஐயப்பன், வளர்மதி கலைச்செல்வன், வலைதள பொறுப்பாளர்கள் பிளாசா ராஜேஸ்வரி சேகர் சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.