• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை…

ByP.Thangapandi

Jan 5, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்த துரைராஜ்., 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சேடபட்டி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாகவும், 2001 முதல் 2006 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்.,

2011 ஆம் ஆண்டுக்கு பின் சேடபட்டி தொகுதி பிரிக்கப்பட்டு உசிலம்பட்டி தொகுதியுடன் சேர்க்கப்பட்ட நிலையில் அதிமுகவின் மாவட்ட அவைத் தலைவராக இருந்தவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக மறைந்தார்.,

இவர் அமைச்சராக இருந்த போது வைகை அணையிலிருந்து சேடபட்டி வரை அமைக்கப்பட்ட சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இன்றும் பயனடைந்து வருகின்றனர்.,

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திரு உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து ஒபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.,