• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் பேரூராட்சி கவுன்சிலரின் கார், ஜேசிபி, ஹோட்டல் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கிய போதை வாலிபர்கள் நள்ளிரவில் அட்டகாசம்.., போலீசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Jan 3, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தற்போது கஞ்சா போதை வாலிபர்களின் அடைக்கல பூமியாக உள்ளது.

மதுரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் அலங்காநல்லூரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் .
அலங்காநல்லூரில் சட்ட விரோத மதுபான விற்பனை கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் தாராளமாக கள்ள மார்க்கெட்டில் விற்பனை ஆகிறது.

மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அலங்காநல்லூரில் உள்ள பெண்கள் பள்ளியில் இது போன்ற போதை வாலிபர்கள் அட்டகாசத்தால் பள்ளி செல்லும் மாணவிகள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்

இதற்கு பின்பும் காவல்துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாதால் நள்ளிரவு நேரங்களில் போதை தலைக்கு ஏறிய வாலிபர்கள் வாகனங்களை அடித்து நொறுக்குவது கடைகளில் உள்ள பொருட்களை அடித்து உடைப்பது, வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறிய சம்பவங்கள் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக பலமுறை அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவலாகவும் புகாராகவும் அளிக்கப்பட்டு இதுவரை இவ்வாறு செயல்படும் நபர்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் அலங்காநல்லூர் காவல்துறைக்கு தேவையான காவலர் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் இரவு ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு போலீசார் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் போதை ஆசாமிகள் அலங்காநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர் என்பவருக்கு சொந்தமான கார் அவரது வீடு அருகே வைக்கப்பட்டிருந்தது இதே போன்று ஜேசிபி,வாகனம் மற்றும் காளியம்மன் கோவில் முன்பாக உள்ள ஹோட்டல் உள்ளிட்டவற்றை இரவு நேரத்தில் அடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் கிராம பொதுமக்கள் சார்பாகவும் பாதுகாப்பு தர வலியுறுத்தி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில தினங்களில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடியநேரத்தில் இது போன்ற அத்துமீறி செயல்படக்கூடிய நபர்களை உடனடியாக கைது செய்து அலங்காநல்லூர் பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட காவல் துறைக்கும் இப்பகுதி பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.