• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறது.

BySeenu

Jan 2, 2024

மேற்குமண்டத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 80 குழுக்களால் பிரிந்து வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனல். அதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எலன் இண்டஸ்ட்ரி உரிமையாளர் விக்னேஷ் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரி சோதனையானது நடைபெற்று வருகிறது. எலன் இன்டஸ்ட் நிறுவனமானது மோட்டார் பம்ப் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
எலன் இண்டஸ்ட்ரி நிறுவனர் விக்னேஷ் என்பவர் SIMA அமைப்பில் தலைவராக உள்ளார். வரி ஏய்ப்பு செய்யப்பட்டதால் இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதே போல கோவை காளப்பட்டி அருகே கிரீன் பீல்ட் ஹவுசிங் என்ற கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
கிரீன் பீல்ட் ஹவுசிங் நிறுவனத்துக்கு சொந்தமான கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வீடு கட்டுமானத்துக்காக பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி இருப்பதாகவும் அதில் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கிரீன் பீல்ட் ஹவுசிங் நிறுவனத்திலிருந்து ஊழியர் ஒருவரை வங்கிக்கு அழைத்துக் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.