• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலையத்தில் வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்

ByKalamegam Viswanathan

Dec 30, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்துமதி மணப்பாறை பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கேரளா மாநிலத்திலிருந்து திருச்சி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 25ஆம் தேதி சாத்தூரில் இருந்து வேலைக்காக சென்று கொண்டிருந்த போது ரயில் மதுரை ரயில் நிலையம் நடைமேடைக்கு வந்த போது, மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் இந்துமதி கழுத்தில் இருந்த இரண்டு பவன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் ஜெயப்ர்டா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த சையது செரிப்(24) என்பது தெரிய வந்தது. எனவே அவரை நேற்று கைது செய்து நீதிபதி உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.