• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுயொட்டி எரர்ம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலி

ByKalamegam Viswanathan

Dec 30, 2023

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டி கிராமத்தில், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்ததையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து , விஜயகாந்த் படத்தினை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், விஜயகாந்த் ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் மொட்டை எடுத்து அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கும்மி அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதில், தேசிய முற்போக்கு திராவிட கழக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் எர்ரம்பட்டி கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதேபோல, அலங்காநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அவர் உருவப்படம் வைத்து நினைவஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.