• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குரூப் 8 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி : இன்று நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு..!

Byவிஷா

Dec 29, 2023

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட, குரூப் 8 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று (டிசம்பர்.29) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள் தொகுதி எட்டில் அடங்கிய செயல் அலுவலர் நிலை நான்கு பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்து காலி பணியிடங்கள் அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் தேர்வானவர்களின் விவரங்கள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வரும் தேவர்கள் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதிகள், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பில் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்க தவறினால் மறுவாழ்வு வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப் பட்டுள்ளதாகவும் டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது.