• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தென்மாவட்ட மக்களுக்கு மின்பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

Byவிஷா

Dec 28, 2023

தென்மாவட்டங்களில் கனமழையால் மின் வயர்கள் மற்றும் மின்சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதால், மக்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் வரலாறு காணாத கனமழை பெய்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழையால் மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் மக்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வீட்டில் மின் சுவிட்சுகளை ஆன் செய்யும் போது பாதுகாப்பாக காலில் காலணி அணிய வேண்டும். நீரில் நனைந்த ஃபேன் மற்றும் லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்கக் கூடாது. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருப்பதால் பயன்படுத்தக் கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லை என்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரத்தை எடுத்து வரக்கூடாது. மீன் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ அல்லது மின் கம்பங்கள் உடைந்து இருந்தாலோ சாய்ந்திருந்தாலோ உடனடியாக மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு 9498794987 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.