• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புறக்காவல் நிலையம்‌ திறப்பு விழா.., காவல் ஆணையர் – ஆட்சியர் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Dec 22, 2023

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகததில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி சேலைகள் அடங்கிய பண்டல்கள் திருட்டு போனதன் எதிரொலியால் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அலுவலகத்திற்கு வரும் வாயிற் பகுதி, வெளிபபுற சுற்றுச்சுவர் பகுதிகளில் நவீன கேமரா பொருத்தப்பட்டு புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் படி அமைத்துள்ளனர்.

இதன் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநாகர காவல் ஆணையாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தல்லாக்குளம் காவல் உதவி ஆணையர், சம்பத் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.