• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தும் அரசு பேருந்தும் மோதி விபத்து.., இரண்டு பேர் படுகாயம்…

ByKalamegam Viswanathan

Dec 16, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் PACR.அரசு மருத்துவமனை முன்பு இராஜபாளையத்தில் இருந்து மாங்குடி சென்று மாங்குடியில் இருந்து இராஜபாளையம் திரும்பி வந்த அரசு பேருந்தை சக்திவேல் என்ற ஓட்டுநர் மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த பொழுது. திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சொந்த ஊர் வந்து கொண்டிருந்த பொழுது, விழுப்புரம் மாவட்டம் T.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அன்பரசு வயது 29. நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் வேல்முருகன் மற்றும் அரசு பேருந்தில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். மற்ற ஐயப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.