• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை செய்து உடல் நல்லடக்கம் செய்தனர்…

ByPandikumar

Dec 14, 2023

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்த சின்ன ராசு என்பவரின் மகன் ஜெய் ஜவான் வயது 40. இவருக்கு ஜெயந்தி 32 என்ற மனைவியும் திவ்யா என்ற 10 வயத மகளும் உத்ரா என்ற 6 வயது மகனும் உள்ளனர்.

ஜெய் ஜவான் 4 மெட்ராஸ் – ரெஸிமெட் -அருணாச்சலப் பிரதேசம் டேஸ்பூர் ராணுவ முகாமில் அவில்தாரராக கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் பணிபுரிந்த முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானார். அவரது உடல் சொந்த ஊரான சங்கராபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் 4 மெட்ராஸ் ரெஜிமென்ட் முகமினை சேர்ந்த ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் உடல் மீது போர்த்தி இருந்த தேசியக் கொடியை ஜெய்சவானின் மகனான உத்ரன் என்பவரிடம் ராணுவ வீரர் ஒப்படைத்தனர். அதன் பின்னர் சமுதாய வழக்கபடி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்அடக்கம் செய்யப்பட்டது.