• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..,லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக 24 வகை மளிகை தொகுப்பு..!

Byஜெ.துரை

Dec 14, 2023

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள சிவன்பார்க்கில் மிக்ஜாம்புயலால் பாதிப்படைந்த பகுதியான எம்.ஜீ.ஆர் நகர் சூளைபள்ளம் பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான 24 தொகுப்பு அடங்கிய மளிகைப் பொருட்களை லையன்ஸ்கிளப் ஆப் சென்னை சங்கமம் சார்பாக வழங்கப்பட்டது.
டாக்டர் ஜாகீர்உசேன் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்விற்கு, லயன் மோகன்பாபு முன்னிலை வகித்தார். மற்றும் தலைவர் ஜவஹர் செயலாளர் அசோக்,பொருளாளர் தா.ரங்கன், இராமதாஸ்,பாலாஜி, அருண்குமார்,மணி, ஜெய்சிங்,பன்னீர், இராஜேஷ்குமார், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான மளிகை தொகுப்பை வழங்கினர்.
இந்த தொகுப்பை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் இந்த நல சேவையை பாரட்டி தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.