• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோல்ப் விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட வீரர்கள்..!

BySeenu

Dec 12, 2023

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில், ‘செஷாயர் ஹோம்’ மற்றும் ‘கோயமுத்தூர் கோல்ஃப் கிளப்’ சார்பாக நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் கோல்ஃப் விளையாட்டு வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கடந்த 57 ஆண்டுகளாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் “செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை” கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை, திறனறிவு, பயிற்சிகள், மருத்துவ உதவிகள் என பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள 66 ஆயிரம் மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் “செஷாயர் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை” மற்றும் கோயமுத்தூர் கோல்ப் கிளப் இணைந்து “சேரிட்டி டோரன்மென்ட்” எனும் கோல்ப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 96 பேர் 4 அணிகளாக கலந்து கொண்டனர். இதில் “புரோ வி 24” அணி 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. டஸ்காட்டிக்ஸ் அணி 18 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.முன்னதாக நடைபெற்ற விளையாட்டு போட்டி துவக்க நிகழ்ச்சியில், அகில இந்திய செஷாயர் அறக்கட்டளையின் சேர் பெர்சன் தனலட்சுமி கோவிந்தராஜன், கோவை கிளை தலைவர் கோவிந்தராஜன்,, துணை தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் ரவிச்சந்திரன், கோயமுத்தூர் கோல்ஃப் கிளப் தலைவர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய, செஷாயர் அறக்கட்டளையின் சேர் பெர்சன் தனலட்சுமி..,
மாற்றுத்திறனாளிகளில் குறிப்பாக முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நாற்காலிகள் சிகிச்சை என அனைத்து இலவசமாக செய்து வருகிறோம். கோல்ப் கிளப் உறுப்பினர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள், கல்வி நிறுவன தலைவர்கள் போன்றோர் வருவதால் அவரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்தும், அவர்கள் மூலம் உதவி தேவைப்படும் மாற்றுதிறனாளையும் கண்டறிய இந்த போட்டியை முதல் முறையாக கோவையில் நடத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த போட்டிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பணிகளுக்கு நிதி திரட்டுவதாகவும், இதே போல ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.