• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கூகுள் பிளே ஸ்டோரில் 17 ஆப்கள் நீக்கம்..!

Byவிஷா

Dec 9, 2023

கூகுள் நிறுவனம் 17 ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்கள் இடம்பெற்றுள்ளன. அதில், விதிகளை மீறும் ஆப்கள் மற்றும் சட்டவிரோதமான ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது 17 ஆப்களை கூகுள், தனது பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் பயனர்களுக்கு கடன் வழங்குவதாகும். மொத்தம் 18 கடன் ஆப்கள் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு புகார் வந்துள்ளது. அதில் 17 ஆப்கள் பயனர்களுக்கு கடன் வழங்குவதுடன், போனில் உள்ள தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை உளவு பார்த்தது தெரியவந்தது.
உளவு பார்த்து சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு பயனர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இந்த ஆப்கள் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களை குறிவைத்து மிரட்டுகிறது. இதனையடுத்து 17 ஆப்களையும் பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. மேலும், பயனர்களும் இந்த 17 ஆப்களை தங்கள் போனில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
நீக்கப்பட்ட ஆப்கள் வருமாறு., 1. ஏஏ கிரெடிட், 2. அமோர் கேஷ், 3. குயாபா கேஷ் 4. ஈஸி கிரெடிட், 5. கேஷ் வாவ், 6. கிரெடிபஸ், 7. ஃப்ளாஷ் லோன், 8. பிரஸ்டமோஸ் கிரெடிட்டோ, 9. பிரஸ்டமோஸ் டி கிரெடிட்டோ-யுமிகாஷ், கோஷ், 10. கோ கிரெட்டிடோ, 11. இன்ஸ்டானியோ ப்ரெஸ்டாமா, 12. கார்டெரா கிராண்டே, 13. ராபிடோ கிரெடிட்டோ, 14. ஃபினப் கடன், 15. 4S பணம், 16. உண்மை நைரா, 17. ஈஸி கேஷ்.