பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்.
சிவகங்கை தொண்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பில் மாநிலம் தழுவியஉள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து கழக வரவு செலவுக்கு இடையேயான தொகையினை வழங்கிட வேண்டும், 2023 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய ஒப்பந்த பலன், அகவிலைப்படி வழங்கிட வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், 15 ஆவது ஓய்வூதிய பேச்சுவார்த்தை துவக்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.