• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை மீட்பு பணிக்காக திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்களை வழி அனுப்பிய நிகழ்வு…

ByNamakkal Anjaneyar

Dec 4, 2023

சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை தத்தளித்துக் கொண்டுள்ள சூழலில் மாநிலம் முழுதும் உள்ள நகராட்சிகளில் இருந்து சென்னை பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி தூய்மை பணியாளர்கள் 15 பேர் மற்றும் தூய்மை ஆய்வாளர் ஒருவரும் ராசிபுரம் நகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள் 10 பேர் மற்றும் ஆய்வாளர் ஒருவரும் இன்று நகராட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர் இவர்களை திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் சேகர் அனுப்பி வைத்தார் புதிய இடத்தில் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.