• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தையே கலக்கி வரும் கொள்ளையர்கள் ஆறு பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது.., எஸ்பி போலீசாருக்கு பாராட்டு…

ByNeethi Mani

Dec 3, 2023

ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார்கள் சதீஷ், குணசேகரன் ஆகியோர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலை கும்பகோணம் விருத்தாச்சலம் நெடுஞ்சாலை பகுதிகளில் போந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், விடியற்காலை அதிவேகமாக சென்ற காரை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக கூறியுள்ளனர்.

சந்தேகப்பட்டு காரை சோதனை செய்ததில் கத்தி, இரும்பு ராடு, உருட்டு கட்டைகள் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களான தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்ற சங்கம்-

மாநிலத் தலைவராக உள்ள  காட்டுமன்னார்கோவில் அருகே மடப்புரம் பகுதியை சேர்ந்த விஜய், வீரஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த மாதவன், கடலூர்- புத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான பிரபு, விக்னேஷ், கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர்களான பிரபாகரன், ஹரிஷ் என்பதும் இவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட சென்று கொண்டிருந்ததும் இவர்கள் மீது  தமிழகம் முழுவதும் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை  உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளதும்,

பல்வேறு நீதிமன்றங்களில் பிடிவார்  உள்ளதும் தெரியவந்தது. மேலும்,  கடலூர் -புத்தூர்  பிரபு மீது மட்டும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திருட்டு உட்பட 27 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 5 இடங்களில் பிடிவாரண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து குற்றவாளிகளிடம் விசாரணை செய்து இவர்களைப் பிடித்த இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார்கள் சதீஷ், குணசேகரன் ஆகியோர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.