• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

MP கனிமொழி தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா.., வினாடி வினா போட்டி…

ByKalamegam Viswanathan

Dec 2, 2023

மதுரை மண்டல அளவில் 2வது சுற்று போட்டி கனிமொழி MP தலைமையில் நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கிட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP, , வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த் ,மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் தளபதி MLA, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டியில் பங்கேற்க மதுரை ,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள்ர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

ஒன்றிய அரசு, பாஜக போல் திமுக பழி வாங்கும் நடவடிக்கை எடுக்காது – மதுரையில் கனிமொழி பேட்டி..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக வந்த திமுக மகளிர் அணி செயலாளரும் எம் பியுமான கனிமொழி பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியது தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்துள்ளனர் இதே போன்று தமிழக அரசின் நடவடிக்கை எடுக்குமா? என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் ஒன்றிய அரசு போல பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை, நீதி, நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதனால் யாரையும் மிரட்டுவதற்காக செய்துவிட்டு பாதியில் நிறுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கியதை வைத்து அனைத்து அதிகாரிகளையும் குற்றம் சொல்லக்கூடாது என பேசியது குறித்த கேள்விக்கு பாஜக மீது பாஜக நிர்வாகிகள் மீது சிஏஜி அறிக்கையில் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை அதற்கு பதில் சொல்லட்டும் என கூறிவிட்டுச் சென்றார்.