• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதி லட்டு விற்பனை…

திருப்பதியில் மலை மேல் கோவில் கொண்டுள்ள வெங்கடாசலபதி, கன்னியாகுமரியில் கடற்கரை ஓரத்தில் கோவில் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்பட்ட லட்டுகள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலிலும் பிரசாதமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, குமரி மாவட்டத்தை சேர்ந்த பக்த்தர்களால் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

சேகர் ரெட்டி அண்மையில் கன்னியாகுமரி வந்திருந்த போது, செய்தியாளர்கள் இடம்,

திருமலை திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு, டிசம்பர் முதல் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் விற்பனை செய்யப்படும். முதல் கட்டமாக நேற்று (டிசம்பர் 1)ம் நாள் முதல் கட்டமாக 5000ம் லட்டுகள் கொண்டு வரப்பட்டது.

இன்று காலை (நவம்பர்_2)ம் தேதி பக்தர்களுக்கு விற்பனை தொடங்கியது. மாதம் தோறும் சனிக்கிழமை தோறும் லட்டு விற்பனை செய்ய படும். ஒரு லட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்கள் வரிசையில் நின்று பயபக்தியுடன் திருப்பதி பிரசாதத்தை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.