• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் 5 மாநில தேர்தல் முடிவுகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்…

BySeenu

Dec 1, 2023

பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு முதல்வர் இன்று பண்டிதர் அயோத்திதாசர் நினைவாக மணிமண்டபம் நிறுவி திறந்து வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் முன்வைத்த நீண்ட கால கோரிக்கை நிறைவேறி இருப்பது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். டிசம்பர் 23 திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் இந்தியா கூட்டணி தலைவர்களான தமிழக முதல்வர், திமுக கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தேசிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான அட்சரமாக இந்த மாநாடு அமையும் என்று நம்புகிறேன். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்துள்ள கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வெளிவந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு பாடம் புகட்டியது போல ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய தோல்வியை தருவார்கள் என்று நாடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. பாரத் ஜூடே யாத்ராவை நடத்திய ராகுல் காந்தி மீது இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு இதன் மூலம் கூடியிருப்பதாக நம்புகிறோம். இந்தியா கூட்டணி, ஆட்சியில் உள்ள பாஜகவை அப்புறப்படுத்துவதற்காக ஒற்றை குறிக்கோளோடு ஒருங்கிணைந்து இருக்கிறது. அந்த குறிக்கோள் நிறைவேறும் என்பதை உணர்த்தக்கூடிய தேர்தல் முடிவுகளாக இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான் நம்புகிறேன். தமிழக ஆளுநர் திமுக அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்தில் பல்கலைகழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது, அவரது அரசியல் அமைப்பு சட்ட விரோத போக்கை உணர்த்துகிறது.

வேந்தர் பதவியை முதல்வர் தான் ஏற்று நடத்த வேண்டும் என்று மசோத கூறுவதை அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. தனியார் பல்கலைகழகங்களுக்கு உரிமையாளர் வேந்தராக இருப்பார், அதனை ஏற்றுக்கொள்ள பக்குவம் அவருக்கு உள்ளது. ஆனால் மாநில அரசு, அரசை வழிநடத்தும் முதல்வர் வேந்தராக இருக்க வேண்டும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உச்சநீதிமன்றம் உடனடியாக முதல்வரை அழைத்து பேசி இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னேன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்டோம். ஆனால் ஆளுநர் தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது பெரிய அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதைப் போன்ற இருமாத்தோடு இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஆளுநரின் உச்சந்தலையிலே கொட்டு வைத்திருக்கிறது.

இனிமேலாவது அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என்று நான் நம்புகிறேன்ஓ உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கோபிசெட்டிபாளையம் இந்திராநகரில் சாதிவெரியர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், காவல் துறையினர் கைது நடவடிக்கை வரவேற்கிறோம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.