• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விரோதத்தில் தென்னை மரங்களை வெட்டிய பெண் கைது.., போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை…

ByP.Thangapandi

Nov 30, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி அருகே உள்ளது பகாத்தேவன்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மாயத்தேவர், மீனாட்சி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வந்தனர். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்திற்குள் புகுந்து 8க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பினர். வழக்கம் போல் மீனாட்சி என்பவர் மறுநாள் காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கொட்டைகையில் ஜல்லிகட்டு காளை, இரு கோழிகள் இறந்து கிடந்தன. மேலும் தென்னை மரங்கள் வெட்டி கிடந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்தி வந்த நிலையில் தென்னை மரங்களை வெட்டிய அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய கணவர் சடையன்(65), மகள்கள் ஜெயந்திமாலா (40), மலர்விழி (42) மற்றும் மகன் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.