• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாலையில் மழை நீரை அகற்றாததால் நூதன முறையில் போராட்டம் நடத்திய கவுன்சிலர்…

ByM.Bala murugan

Nov 29, 2023

மதுரை 20வது வார்டு விளாங்குடி ராமமூர்த்திநகர் கிருஷ்ணா தெரு மற்றும் சாலை மிகவும் சேரும் சகதியும்மாக உள்ளதாகவும் பொன்நகர் பகுதியில் சாலையில் குழம் போல் மழை தண்ணீர் தேங்கி இருபதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வாகனத்தில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து செல்வதால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் தண்ணீர் தேங்கி இருப்பதால் டெங்கு கொசு உற்ப்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்ப்படும் சூழல் இருப்பதால் இருவது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன் பலமுறை சம்பந்தப்பட்ட மாநகாரட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நாகஜோதி சித்தன் பொதுமக்களுடன் சேர்ந்து கிருஷ்ணா தெருவில் நாற்று நடும் போராட்டமும் பொன்நகர் தெருவில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மீன்களை விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றியும் சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர் இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.