• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

58 கால்வாயில் விவாகரம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கைது.., உசிலம்பட்டியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

ByP.Thangapandi

Nov 27, 2023

வைகை அணையிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளை கைது செய்ததைக் கண்டித்து உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி 58 கால்வாய் ஆகியவற்றுக்கு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்., தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்த சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக நகர் கழகத்தின் சார்பில் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும் , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையிலான அதிமுகவினரை கைது செய்ததை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரியும் கொட்டும் மழையில் அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.