• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குப் பூமி பூஜை..!

ByP.Thangapandi

Nov 24, 2023

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 69 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிட்குட்பட்ட கிருஷ்ணாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு கிராமத்திற்கு சொந்தமான பொது மயானத்திற்கு செல்வதற்கு பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.41இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் மற்றும் தொட்டப்பநாயக்கனூர் ஓட்டக்கல்பாறை எதிரில் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், கால்நடைகளை அழைத்து செல்லவும், இயந்திரங்கள் செல்ல ஏதுவாக சாலை வசதி வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.25 இட்சத்து 60ஆயிரம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை பணிகள், நக்கலப்பட்டி ஊராட்சியில் உள்ள வாடிகருப்புகோவில் அருகில் உள்ள குடியிருப்புகளில் குழாய் பதிக்கும் பணி போன்ற பல்வேறு பணிகளுக்கு ரூ.2லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் பூமிபூஜைகள் நடைபெற்றது.
இதில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர் இந்துமதி, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ரஞ்சனிசுதந்திரம், பங்கேற்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் அம்மாவாசை, தனலட்சுமி பன்னீர்செல்வம், வதனா தனிக்கொடி, பாண்டிலட்சுமி சுரேஷ் குமார், நக்கலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்விஜயா கருப்பத்தேவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், தங்கவேல், உதவி செயற்பொறியாளர்கள் வினோத், சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன், தொழில்நுட்ப உதவியாளர் காமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், ஆவின் செயலாளர் ரமேஷ், கூட்டுறவு சொசைட்டி தலைவர் சந்திரசேகர், ஒப்பந்ததாரர் வெங்கடேஷ், ஹரி, சீனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.