• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம்..!

ByM. Dasaprakash

Nov 21, 2023

சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்துச் சென்றனர்.

தேனி நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக ஆலய வளாகத்தில் 108 சங்கை சிவலிங்க வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு பின் புனித கலச நீர் அடங்கிய குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர்.

பின்னர் தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் சிவபெருமானுக்கு பால் தயிர் சந்தனம் பழச்சாறு உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக 108 சங்கை எடுத்து வந்து சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்தனர். பின்னர் சிவபெருமானுக்கு புனித கலச நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த சிவபெருமானுக்கு பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கார்த்திகை மாத சோமவாரத்தில் சிவபெருமானுக்கு நடைபெற்ற சங்காபிஷேகம் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.