• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேனியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்…

ByM. Dasaprakash

Nov 20, 2023

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருதாகவும்மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கும் , பட்டியல் சமூக மக்களுக்கும் ,கிராமங்களில் குறைவாக வாழும் பிற்படுத்தப்பட்ட சில சமூகங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது என்றும் ,இந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாக மிக முக்கிய காரணமாக விளங்குவது கஞ்சா மது போதை ஆகியவற்றை இளைஞர்கள் பயன்படுத்தும் போது பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு கொலை கொள்ளை ஆகிய செயல்களில் ஈடுபட தூண்டுகிறது என்றும்இதனால் கஞ்சா மது போதையை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்றும் ,கஞ்சா அடிப்பதற்கு மது குடிப்பதற்கும் தனியாக ஆடுமேய்க்கும் நபர்கள் ,வயல் வேலை செய்யும் விவசாயிகள், அரசு வேலைக்கு செல்லும் அப்பாவி மக்களை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டி வரும் நிலை தற்பொழுது மாறி வருகிறது என்றும்,இதனை கருத்தில் கொண்டு கஞ்சா மது ஆகியவற்றை மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்றும், மது கஞ்சா போதை காரணமாக குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும் ,அதனை தடுக்க காவல் துறை சரியான முறையில் கொலையாளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மேலும் இந்த கொலைகளுக்கு காரணமாக உள்ள நபர்களை உடனடியாக விசாரணை செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.