• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

ByP.Thangapandi

Nov 20, 2023

தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் கலைஞர் மகளீர் உரிமை தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கலைஞர் மகளீர் உரிமை தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கலைஞர் மகளீர் உரிமை தொகை வழங்க கோரி கண்டன கோசங்களை எழுப்பினர்.,

தொடர்ந்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம் மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு மகளீர் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.