• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Nov 15, 2023

சிந்தனைத்துளிகள்

ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. அதைக் கொத்தித் தின்ன விரும்பியது. அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது… புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது… ‘நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி’ என்றது புறா.
‘என் மனதிற்குள் …நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது’என்றது புழு.
‘என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்’என புறாக் கேட்டது.
‘உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்.. நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா.. உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே.. சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா …? அதே போன்று தானே.. நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.
அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்…நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.
புறா… புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.
நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.
உலகில் எல்லோரும் நல்லவர்களே!