• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவிலுக்குள் புகுந்த பாம்பு பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2023

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஐயப்பன் கோவிலில் ஐந்து அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு. வன உயிரின ஆர்வலர் சகாதேவன் பத்திரமாக கருநாகப் பாம்பை மீட்டு நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதிக்குல் விடப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயில் உள்ளது.

கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இன்று காலை கோவில் பூசாரி கைலாசநாதன்(வயது 62). கோவில் நடை திறந்து ஐயப்பன் சன்னதி கதவை திறந்த போது பாம்பு சீரிய சத்தம் கேட்டது .

இதனை தொடர்ந்து அவர் அருகில் இருந்த பிரேம்குமார்.மற்றும் அவரது தந்தை பாலமுருகன் ஆகியோர் பாம்பை பிடிப்பதற்காக சகாதேவனிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருநகரை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சகாதேவன் லாவகமாக பாம்புகள் பிடிப்பதில் வல்லவர்.

இவர் தகவல் அறிந்து வந்து ஐயப்பன் கோவிலில் சன்னதி கதவருகே பதுங்கி இருந்த ஐந்து அடி நீள கருநாகப் பாம்பினை லாவகமாக பிடித்து பையில் அடைத்து பத்திரமாக நாகமலை புதுக்கோட்டை வனத்துறை பகுதிக்கு கொண்டுள்ள ஏற்பாடு செய்தார்.

ஐயப்பன் கோவிலில் அதிகாலை நேரத்தில் ஐந்து அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.