• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம்.., ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் எச்சரிக்கை…

ByG.Suresh

Nov 12, 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,பொருட்கள் வாங்க சிவகங்கை மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். காந்தி வீதி, நேரு பஜார் அரண்மனை வாசல் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஜவுளிகள், பட்டாசுகள் அழகு சாதன பொருட்களை வாங்க மக்கள் வெள்ளமென திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, ஒலிபெருக்கியின் மூலமாக பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினர். மழை இல்லாததால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமாக கூடியதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sivagangai Diwali public Crowd 11.10.23